பிரபல ஜோதிடர் கணித்துள்ள ‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்….. நாளை முதல் உங்கள் பத்திரிகை டாட் காமில் ….

Must read

பத்திரிகை.காம் வாசகர்களுக்காக  பிரபல ஜோதிடரும், எழுத்தாளருமான  திருமதி வேதா கோபாலன் ‘பிலவ’   தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக நமது கணித்துள்ளார்.   12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள் நட்சத்திரம் வாரியாக நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து வெளியாகிறது.

ளங்கள் அளிக்கப்போகும் தமிழ் புது வருடமாகிய  பிலவ ஆண்டின் சித்திரை 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது.

தமிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 35 வதாக வரக் கூடிய பிலவ வருடம் இதோ வந்துகிட்டிருக்குங்க.

பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பொதுப்பலன்கள்:

இந்தப் புது வருடம், மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரனின் நட்சத்திரம். எனவே பெண்களுக்கு சந்தோஷத்தையும் மனநிறைவும் முன்னேற்றமும் தரும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையும்.. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைக்குக் காத்திருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அனேகமாக அது பெண் குழந்தையாக இருக்கலாம். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கவும் குழந்தைப் பேறு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாண்டு பரணி நட்சத்திரத்தில் பிறப்பதால் மக்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். உணவுத் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்குச் சந்தை சிறந்த லாபம் தரும். கட்டுமானத் தொழிலும் மருத்துவத் தொழிலும் வளர்ச்சியடையும்.

வாகனம் தொடர்பான பிசினஸ் உள்பட, .பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க, உற்பத்தி தொடர்பான பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க அனைவருக்கும் வளர்ச்சி ஏற்படும். கூடுதல் லாபமும் கிடைக்கும்

அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு மிதமான முன்னேற்றம் இருக்கும். சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன் உண்டு.

ஸ்டூடன்ட்ஸ் சற்றுஅதிக கவனமுடன் படித்தால் வெல்ல முடியும்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும்.

வாசகர்களே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் ராசிக்குரிய பலன்கள் நட்சத்திர வாரியான  நாளை முதல் (11ந்தேதி) முதல் தினசரி 4 ராசிகள் வீதம் 3 நாட்கள்  தொடர்ந்து வெளியாகிறது. பார்க்க தவறாதீர்கள்…

More articles

Latest article