காதலருக்காக மதம் மாறிய பிரபல நடிகை….!?

Must read

samnt2
சென்னை:
பிரபல தெலுங்கு நடிகர்  நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ள நடிகை சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்  நடிகை சமந்தா. இவர் தான் காதலித்து வரும் நாக சைதன்யாவை திருமணம் செய்வதற்காக இந்து மதத்துக்கு மாறி இருக்கிறார். எல்லாம் காதல் படுத்தும்பாடு.
நடிகை சமந்தா பல்வேறு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவரும் பிரபல நடிகை. இவர் பிரபல தெலுங்கு  ‘டான்’ நடிகர்  நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்.  இந்து மதத்தை சேர்ந்தவரான நாக சைதன்யாவை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சமந்தா காதலித்து வந்ததால், திருமணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
samtha
இதையடுத்து சமந்தா இந்துவாக மாற முடிவு எடுத்து  இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். நாக சைதன்யாவை காதலிப்பதை அண்மையில் தான் சமந்தா ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
 
நாக சைதன்யா, சமந்தா திருமணத்தை இந்து முறைப்படி நடத்த நாகர்ஜுனா விரும்புகிறாராம். இந்நிலையில் தான் சமந்தா இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் மதம் மாறியபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யா, சமந்தா இந்து முறை தவிர்த்து கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். கிறிஸ்தவ முறைப்படியான திருமணம் சென்னையில் நடக்குமாம்.
நாக சைதன்யா வீட்டில் சமந்தாவை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
தற்போது அவர்கள் சைதன்யா, சமந்தாவின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டார்களாம்.

More articles

Latest article