சமாஜ்வாடி கட்சி: வீதிக்கு வந்த குடும்பச் சண்டை! தேர்தலை பாதிக்குமா?

Must read

 
samjwadi
உ.பி.:
மாஜ்வாடி கட்சியின் குடும்ப சண்டை காரணமாக வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்கட்சிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
உத்தரப் பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடிக் கட்சியில் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் – மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்த மோதலுக்கு காரணமாக இருப்பவர் முலாயமின் அன்புத் தம்பியும் அகிலேஷின் சித்தப்பாவுமான அமைச்சர் ஷிவ்பால்.
அகிலேஷ் அமைச்சரவையில் ஷிவ்பால் நில மேம்பாடு, நீர்வளம் ஆகிய துறைகளை கவனித்து வந்தார். இவருக்கு கட்சியில் நல்ல செல்வாக்கு உண்டு. அவருக்கும் அகிலேஷுக்கும் இடையே ஏற்கனவே மனக்கசப்பு நிலவி வந்தது. இந்நிலையில் அகிலேஷ் ஷிவ்பாலின் ஆதரவு பெற்ற இரு மந்திரிகளை பதவி நீக்கம் செய்து ஷிவ்பாலின் சில இலாகாக்களையும் அவரிடமிருந்து பறித்தார்.
இதனால் வெறுப்படைந்த ஷிவ்பால் கட்சியைவிட்டு வெளியெறும் சூழல் ஏற்பட்டது. விரைவில் உ.பி மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் கட்சியில் செல்வாக்கு மிகுந்த ஷிவ்பால் கட்சியைவிட்டு வெளியேறினால் கட்சிக்கு தேர்தலில் மிகுந்த சரிவு ஏற்படும் என்று கருதிய கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் தனது மகனும், மாநில முதல்வரும், கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ் யாதவிடமிருந்து கட்சித் தலைவர் பதவியைப் பறித்து இப்போது ஷிவ்பாலை அப்பதவியில் நியமித்து இருக்கிறார்.
அதேநேரத்தில், தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் அகிலேஷ் ஆய்வு செய்தார்.  இந்த குடும்பச் சண்டை, பதவிப் பறிப்புகளால், சமாஜ்வாதி மூத்த தலைவர்களும், அதிகாரி களும், அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதபதைப்பில் உள்ளனர்.

கடந்த, 1992ல் உருவாக்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி, உ.பி.,யில், 1993, 2003, 2012 தேர்தலில் வென்றது
கடந்த, 2012 தேர்தலின் போது, தன் மகன் அகிலேஷை, முதல்வர் வேட்பாளராக முலாயம் அறிவித்தார். இதனால், கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும், சிவபால் எரிச்சலடைந்தார்.
‘அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலை, முலாயம் தலைமையில் சந்திக்க வேண்டும்’ என, சிவபால் கூறி வருகிறார்தனக்கு நெருக்கமானவரான, கட்சியில் இருந்து விலகிய, அமர் சிங், மீண்டும் இணைந்தது, சிவபாலுக்கு சாதகமாக அமைந்தது.
சமீபத்தில், அமர் சிங் அளித்த விருந்தில், சிவபால், தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தீபக் சிங்கால், பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள் காயத்ரி பிரசாத் பிரஜாபதி, கிஷோர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
மேலும், தன் ஆதரவாளர்களுக்கு அதிக, ‘சீட்’ கேட்டு,சிவபால் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்
முன்னாள் கொள்ளைக்காரரான முக்தார் அன்சாரியின் குவாமி ஏக்தா தள் அமைப்பை, சமாஜ்வாதியுடன் இணைக்க, சிவபால் முயற்சித்தார்;  இதற்கு, முலாயமும் ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஊழல், மோசடி மற்றும் பல்வேறு வழக்குகளில், இந்த கட்சி தலைவர்கள் சிக்கியுள்ளதால்  அந்த அமைப்பை இணைக்க அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டார் அமர் சிங், மீண்டும் கட்சியில் இணைவதற்கும், அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி, அமர் சிங்கை கட்சியில் சேர்த்தார் முலாயம்.
இது போன்று, பல மாதங்களாகவே, அகிலேஷ் யாதவ் மற்றும் சிவபால் இடையே, மறைமுகமாக பனிப்போர் நடந்து வந்துள்ளது. தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அது தற்போது வெடித்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளுங்கட்சியில் நடைபெறும் பகிரங்க குடும்ப சண்டை தேர்தலில் அவர்களது வெற்றியை பாதிக்குமா என்பதை அரசியல் நோக்கர்கள் விவாதிக்கத் துவங்கியுள்ளனர்.
உ.பி.முதல்வர் அகிலேஷ் கூறியது:  குடும்பத்தை பொறுத்தவரையில், தலைவர் முலாயம் எடுக்கும் முடிவின்படியே, அனைவரும் நடக்கிறோம். அதனால், குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை;
அரசு நிர்வாகத்தில், சில பிரச்னைகள் இருக்கலாம். சில வெளியாட்கள், அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்; அதை ஏற்க முடியாது என்றார்.
 அகிலேஷ் சித்தப்பா சிவபால்சிங்  கூறியது:  இலாகா பொறுப்புகளை அளிப்பதும், பறிப்பதும் முதல்வரின் விருப்பமே. அது போல், எந்தெந்த அதிகாரியை நியமிக்க வேண்டும்; நீக்க வேண்டும் என்பதும், அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டது. நான்,  தலைவர் முலாயம் கூறும்படி செயல்படுவேன் என்றார்.
இவர்களின் குடும்பசண்டையால், வர இருக்கிற சட்டமன்ற தேர்தல் பகுஜன் சமாஜ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு சாதகமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ
கிலேஷ்-ஷிவ்பால் மோதலை முலாயம்சிங்  முளையிலேயே கிள்ளி இருந்திருக்கலாம், அப்போது வளரவிட்டு இப்போது தேர்தல் வெற்றிக்காக தனது மகனின் அரசியல் எதிர்காலத்தை பலியாக்கி இருக்கிறார் என்று அரசியல் விமர்ச்சகர்கள் கருதுகின்றனர்.

More articles

Latest article