சென்னை:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக வருமான வரி சோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை, அவர் பொய்யாக வருமான வரித்துறை சோதனை, சிறைவைப்பு என தெரிவித்துள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

 தன்னிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அவதூறு பரப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் என்னை சட்ட விரோதமாக தடுத்து வைத்து அரசியல் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் நடைபெற இருக்கும் முக்கியமான இந்த நேரத்தில் வருமான வரித் துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயக செயல்பாடுகளை பாதிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சி என்றும், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் கருவியாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கும் செயலாக இது உள்ளது என்றும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் செல்வபெருந்தகை, இந்த தகவலை தெரிவித்திருந்தார். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

வருமான வரித் துறையின் செய்திக் குறிப்பு (@IncomeTaxIndia)

இது தொடர்பான செய்திகள் வெளியான சில மணி நேரத்தில், செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று கூறி வருமான வரித் துறை மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வருமான வரித் துறை தரப்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஏப்ரல் 20-ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பும் பின்பும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தொடர்பாக வருமான வரி சோதனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட அவர் தொடர்புடைய எந்த இடத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை .

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சில இடங்களில் கணக்கில் வராத பணம் கைமாற்றப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சில இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனைக்கும் செல்வப்பெருந்தகைக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. வருமான வரித்துறை நடத்திய அந்த சோதனையிலும் எந்தவொரு பணமும் கைப்பற்றப்படவில்லை.

எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தவறான தகவல் பரப்பியது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசுத் துறைக்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பியதற்காக செல்வபெருந்தகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ராகுல்காந்தியின் பேச்சை தவறாக மொழிபெயர்த்தால், செல்வபெருந்தகையை, தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ள ராகுல் தடை விதித்ததாக கூறப்படுகிறது.  அதை நிருபிக்கும்வ கையில், ராகுல் காந்தியின் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அழைப்பில்லை. இதனால் மனமுடைந்த செல்வபெருந்தகை, அதை மறைக்கும் வகையில், தனது வீட்டில் ஐடி ரெய்டு என பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித்துறை  காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது.

குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை! அண்ணாமலை பட்டியல்…

 

[youtube-feed feed=1]