திருவனந்தபுரம்: கேரளாவில் 2 ஆண்டுகளாக போலி வழக்கறிஞர் பயிற்சிகள் பெற்று வந்த ஒருவர், அந்த மாநில  பார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கேரளாவிலும் போலி பெண் வழக்கறிஞர் ஒருவர் பல்வேறு வழக்குகளிலும் ஆஜராகி வந்த நிலையில், பார் கவுன்சில் தேர்தலிலும் போட்டியிட்டு உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அனாமதேய கடிதம் ஒன்றின் மூலம் அந்த பெண் வழக்கறிஞர் குறித்து ஆய்வு செய்த பார் கவுன்சில் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவில் (அலெப்பி) இரண்டு வருடங்களுக்கும் மேலாக வழக்கறிஞர் பயிற்சி பெற்று வந்தtர் செஸ்ஸி சேவியர் என்ற பெண் வழக்கறிஞர். இவர் திருவனந்தபுரம் கல்லூரியில் எல்.எல்.பி பட்டம் பெற்றதாக கூறி வழக்கறிஙர் பயிற்சி பெற்று வந்துள்ளார். யாருக்கும சந்தேகம் எழாவறு,  ஜூனியர் வக்கீலாக நிறுவப்பட்ட வழக்கறிஞரின் அலுவலகத்தில் சேர்ந்தார். அவர் முன்பு அந்த வழக்கறிஞருடன் சில மாதங்கள் இன்டர்ன்ஷிப் செய்திருந்தார்.

பின்னர், பார் கவுன்சிலில் சேர்ந்ததாகக் கூறி, மார்ச் 2019 இல் அலெப்பி பார் அசோசியேஷனில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தார், அது வழங்கப்பட்டது. தொடர்ந்து பல  வழக்குகளுக்காக  நீதிமன்றத்தில் ஆஜரானார். சில அறிக்கைகளின்படி, அவர்  வழக்கறிஞர் ஆணையராகவும்  நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்ல- அவர் இந்த ஆண்டு பார் அசோசியேஷன் தேர்தலில் போட்டியிட்டு நூலகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த (ஜூலை ) 15 ம தேதி பார் அசோசியேஷனுக்கு செஸ்ஸி சேவியர் குறித்து அநாமதேய கடிதம் வந்துள்ளது. அதில்,  செஸ்ஸி சேவியருக்கு எல்.எல்.பி பட்டம் மற்றும் சேர்க்கை சான்றிதழ் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆலப்புழா பார் கவுன்சில், கேரள பார் கவுன்சிலிடம் விளக்கம் கேட்டது. செஸ்ஸி சேவியர் எல்எல்பி பட்டம் குறித்து ஆய்வு செய்த  கேரள ​​பார் அசோசியேஷன் அதிகாரிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

செஸ்ஸி சேவியர் கொடுத்த பதிவு எண் திருவனந்தபுரத்தில் பயிற்சி பெற்ற மற்றொரு வழக்கறிஞருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்து. இதையடுத்து, அவர் குறித்து நீதிபதியின் கவனத்தக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், விளக்கம் அளிக்க கோரி செஸ்ஸி சேவியருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.

இதையடுத்து அவர்மீது உள்ளூர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதில், செஸ்சி சேவியர் நூலகர் என்ற தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சில புத்தகங்களையும் ஆவணங்களையும் திருடியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, செஸ்சி சேவியர் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில்  சரணடைய முயற்சித்தபோது, ​​காவல்துறையின் அறிக்கையில், அவர் ஜாமினில் வெளிவராத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து, நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளதாக கேரள காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.