தேனி:

தேனி அருகே தமிழக அரசின் அனுமதியின்றி, போலி  உரக்கம்பெனி நடத்தி வந்தது தெரிய வந்த நிலையில், அந்த உரக்கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டது.

தேனி அருகே உள்ள கோம்பை காலனி பகுதிகளில்  தனியாருக்கு சொந்தமான ஆர்கானிக் உரக் கம்பெனி செயல்பட்டு வந்தது. இங்கு உரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து எழுந்த புகாரின் பேரில், காவல்துறையினர் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆர்கானிக் உரம் ‘என்கிற பெயரில் ரசாயனங்கள் கலந்து உரம் தயாரித்து வருவது தெரிய வந்தது. மேலும், அரசின் அனுமதியின்றி இந்த ஆலை செயல்பட்டு வந்தாகவும் கூறப்படுகிறத.

இதையடுத்து, அந்த ஆலை மற்றும் அங்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உர மூட்டைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

விசாரணையில், உர ஆலையின் உரிமையான கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷ் ஆண்டனி என்பது தெரிய வந்துள்ளது. அவரை அழைத்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.