போலி பேஸ்புக் ஐடி: போலீஸ் கமிஷனரிடம் எஸ்.வி.சேகர் புகார்!

சென்னை,

ன் பெயரில் போலி பேஸ்புக் ஐடி ஏற்படுத்தி ஆபாச படங்களை பதிவதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்வி சேகர் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

‘என்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து (SVE Shekar Venkataraman) என் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, SV Sekar என்ற பெயரில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொங்கி பல பதிவுகளை தவறான உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளன.

இது என்னுடைய பொதுவாழ்விற்கும் அரசியல் சார்பு நிலைக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

ஆகவே அவற்றை நீக்கி அதை பதிவிட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Fake Facebook ID: SV Shekar complained to police commissioner!