மும்பை

மும்பை நகரைச் சேர்ந்த ஊடகவியலர் ரவீந்திர துசாங்கே உயிருடன் இருக்கும் போதே மரணமடைந்ததாக வாட்ஸ் அப் மூலம்  செய்தி வந்துள்ளது.


மும்பையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் ரவீந்திர துசாங்கே சுமார் 43 வயதானவர் ஆவார்.  இவர் தனது குடும்பத்தினருடன் மனைவியின் பிறந்த வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றுள்ளார்.   வேலைப்பளு காரணமாக ஓய்வெடுக்க நினைத்த அவருக்கு அங்கு ஓய்வுக்குப் பதில் உபத்திரவம கிடைத்துள்ளது.   ஆம்.  அவர் மரணமடைந்ததாக அவருக்கே வாட்ஸ் அப் மூலம் செய்திகள் வந்துள்ளன.

முதலில் இதைக் கண்டுக்கொள்ளாமல் துசாங்கே விட்டுள்ளார்.   ஆனால் அந்த செய்தியை உண்மை என நம்பிய நண்பர்கள் சிலர் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளனர்.   ரவீந்திரனோ துசாங்கேவின் சகோதரர் தமக்கு வந்த செய்தியைக் கண்டு அதிர்ந்து போய் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.  துசாங்கேவின் மரணச் செய்தியில் முகநூலில் இருந்து எடுக்கப்பட்ட அவர் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது.

துசாங்கேவின் குடும்பத்தினருக்குத் துக்கம் விசாரித்து சுமார் 400க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் தகவல்கள் வந்துள்ளன.  ஏற்கனவே நோய் வாய்ப்பட்டுள்ள துசாங்கேவின் தாய் இந்தச் செய்தியால் மிகவும் பதட்டம் அடைந்துள்ளார்.  இது குறித்து துசாங்கே அளித்த எழுத்துப்பூர்வமான புகாருக்கு காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இந்த செய்தி இன்னமும் பகிரப்பட்டு வருவதாக துசாங்கே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.