பேஸ்புக் – கர்ப்பம் – எஸ்கேப்! இளம்பெண்ணை ஏமாற்றிய இந்திய தூதரக அதிகாரி!

Must read

மும்பை:
வுதி நாட்டில், இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி, மும்பை வந்து 25 வயது பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி  தப்பியோடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பை, கண்டிவலி பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சுஷ்மிதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவருக்கும் சவுதி தலைநகர், ரியாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும், ஜபியுல்லா கானுக்கும், பேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பரஸ்பரம் செல்போன் எண் பறிமாறப்பட்டு, பேசி வந்தனர். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.   இந்த நிலையில் ஜபியுல்லா கான், கடந்த ஏப்ரலில் மும்பை வந்தார். அப்போது சுஷ்மிதாவுடன் ஐந்து நாள்  ஒட்டலில் தங்கியுள்ளார். பிறகு, விரைவில் திருமணம் செய்ய வருவதாகக்கூறி  ரியாத் சென்றுவிட்டார்.
Love-in-Facebook
அதன் பிறகு போனில் பேசுவதையும் தவிர்த்திருக்கிறார். இந்த நிலையில் ஐந்துமாத கர்ப்பிணியான சுஷ்மிதா, வேறு வழியின்றி கருவை கலைத்தார்.
மேலும் காவல்துறையிலும் புகார் அளித்தார்.  ஜபியுல்லா கான் வெளிநாட்டில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து சுஷ்மிதா, கூறுகையில், “கருவை கலைத்தபோது, மரபணுவை கூட ஆதாரத்திற்காக சேகரித்து வைத்துள்ளேன்.   ஜபியுல்லா கான் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளேன்.  திருமண ஆசை காட்டி ஏமாற்றுவதும் பலாத்காரம்தான். ஜபியுல்லாகானுக்கு தண்டனை வாங்கித்தருவேன்” என்று கூறினார்.

More articles

Latest article