ஸ்டாலினுக்கு திடீர் கண் சிகிச்சை

சென்னை:

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை.

ஸ்டாலின் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு வந்தார். இங்கு இவருக்கு மதியம் வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கண்ணில் சில இடர்பாடுகள் இருந்ததாகவும் சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாக தரப்பில் தெரிவகிக்கப்பட்டுள்ளது.

கண் சிகிச்சை காரணமாக அவர் இன்று சட்டசபைக்கு வரவில்லை. இதனால் சட்டசபையில் குட்கா, பான்மசாலா தொடர்பான விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
eye treatment for stalin in chennai