ஜெ. கொடநாடு பங்களா கணக்காளர் மர்மச் சாவு

ஊட்டி:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வந்த கணக்காளர் இன்று மர்மமான முறையில் இறந்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இது வரை போலீசார் 10 பேரை கைது செய்து விசாரணை நடந்து வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் மற்றும் சயான் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் விபத்தில் சிக்கினர். இதில் கனகராஜ் இறந்தார்.

இந்நிலையில் இந்த எஸ்டேட்டில் கணக்காளராக பணியாற்றி வந்த தினேஷ்குமார் (வயது 22) என்பவர் அவரது வீட்டில் திடீரென இறந்துள்ளார். இந்த சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


English Summary
jayalalitha's kodnad bungalow accountant suspect death