சென்னையில் நான்கு இடங்களில் அம்மா திருமண மண்டபம்! தமிழக அரசு

சென்னை:

மிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டமன்ற உறுப்பின்ர் சென்னையில் எங்கெல்லாம் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சென்னையில் 4 இடங்களிலும், மதுரையிலும் அம்மா திருமண மண்டபம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில்,  கொரட்டூர், வேளச்சேரி, பருத்திப்பட்டு மற்றும் அயம்பாக்கத்தில் அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று  சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் மதுரையில் அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் அம்மா திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்றத்தில் உரையாற்றியபோது,

ஏழைகள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த அம்மா திருமண மண்டபம் கட்டப்படும் என்று  அறிவித்துள்ளார். 11 இடங்களில் ரூ.83 கோடியில் அம்மா மண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.

ஆனால், தற்போது, ஜெயலலிதாவின் அறிவிப்பு என்ன ஆனது என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லை.


English Summary
amma wedding hall in four places in Chennai, Government of Tamil Nadu notice