சென்னை: அரசுப் பணிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பணி வர விலக்கு நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக கடந்த 2 வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ககட்டுப்பாடுகளுடன், அரசு அலுவலகங்கள் 30% அரசு ஊழியர்களுடன் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பொதுப்போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அச்சங்கத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட தமிழகஅரசு, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரும் 13-ஆம் வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
