காபூல்:
ப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டினரும் உள்நாட்டு மக்களும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர். காபூல் விமான நிலையம் தற்போது வெளிநாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏராளமானோர் அங்கு தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தின் வெளியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், குண்டுவெடிப்பின் பாதிப்பு தொடர்பாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. குறைந்தது 10 பேர் வரை இறந்திருக்கலாம் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.