டெல்லியில் 45 மெட்ரிக் டன் அளவிலான காலாவதியான பீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெல்லி துவாரகா பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் மேற்கொண்ட சோதனையில் இந்த பீர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பீர் பாட்டில்களின் சந்தை மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற இந்த சோதனையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர சட்டங்களை மீறியது தெரியவந்ததை அடுத்து இந்த உணவு வணிக வியாபாரத்தில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோர் நலன் கருதி காலாவதியான பீர் பாடல்களை கைப்பற்றியுள்ள அதிகாரிகள் இதனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.