சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றும், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்,  2022-2023 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெற்ற 582 அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டு,பணி நியமன ஆணைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கையடக்க கணினியை வழங்கி, சிறப்புரை ஆற்றிய  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  நிகழ்ச்சியில் பேசும்போது,   தமிழ்நாடு மக்கள் அனைவரும் மருத்துவ சேவைகள் பெற, அரசு மருத்துவமனையை நோக்கி வரவேண்டும் என்பதே என் இலக்கு; இலக்கில் தற்போது 50% எட்டியுள்ளதாக நம்புகிறேன் எனவும் கூறினார்.

மேலும், நீட் விலக்கு பெற முதலமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார், தற்போதைய நிலையில் நீட் விலக்கு பெற போராடும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் கூறினார்.