ரவுண்ட்ஸ்பாய்:
aa
பேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு.

ராம்குமார் - சுவாதி - தமிழச்சி
ராம்குமார் – சுவாதி – தமிழச்சி

“சுவாதியை கொன்னதா கைது செய்யப்பட்டு (தற்போது மர்மமாக மரணமடைந்த) ராம்குமார் அப்பாவி. இஸ்லாமிய இளைஞரை சுவாதி காதலிச்சாரு. கர்ப்பமாயிட்டாரு. மதம் மாறி திருமணம் செஞ்சுக்க முடிவு பண்ணியிருந்தாரு. இதனால் அவரோட குடும்பத்தினரே ஆளவச்சு சுவாதியை கொலை பண்ணிட்டாங்க.  பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தத்தோட கூலிப்படைங்கதான். இந்த கொலையை செஞ்சுது” அப்படின்னு எழுதிட்டு வந்தாங்க.
இந்த நெலையிலே,  ஒரு பதிவு போட்டாங்க. அதில, “சுவாதிய கொன்னது மணி அப்படிங்கிற இளைஞர்தான். இவரோட அப்பா பேரு இசக்கி.  நெல்லை மாவட்டத்துல இருக்கிற முத்தூர் (சிவந்திப்பட்டி) தான் மணியோட சொந்த ஊரு.
தேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர். அவருகிட்ட  மணி வேலை செய்யறாரு. கருப்பு முருகானந்தத்தோட அடியாள் படையில மணியும் ஒரு ஆளு.
இவருதான் சுவாதி கொலை குற்றவாளி. இவரு, தன்னோட சொந்த ஊருக்கு ரெண்டு மாசமா போவாம இருந்த மணி, இப்ப பத்து நாளுக்கு முன்னாலதான் அங்க போனாரு. இப்போ மொட்டை போட்டிருக்காரு” அப்படினு பேரு, ஊரு அட்ரசோட பதிவு போட்டாங்க.
untitled
வழக்கம்போல இது பத்திகிச்சு. பேஸ்புக் புல்லா, ஒரே பரபரப்பு.
இந்த நிலையில, அங்க இங்க விசாரிச்சு, படாதபாடுபட்டு, அந்த இசக்கி.. (பேஸ்புக் தமிழச்சிக்கு எப்படித்தான் இம்புட்டு வெவரம் கிடைக்குதோ?)  அதான் மணியோட அப்பா நம்பர வாங்கினேன். அவருக்கு போன போட்டா, அவரு பேசத் தயாராவே இல்லை. ரொம்ப பதட்டத்துல இருந்தாரு.  பிறகு பேசறதா சொனனாரு.
ஆனாலும் ரொம்ப முயற்சி பண்ணி அவருகிட்ட பேசினேன். அவரு, “மணி என் பையன்தாங்க. அவனை பத்தி யாரோ தமிழச்சின்னு ஒரு பொம்பள பேசூபுக்ல எழுதிருக்காம். யாரோ ஒரு பொண்ணை அவன் கொன்னுட்டானாம்.  எப்படி இருக்கு பாருங்க..?
என் மகன் அப்படிப்பட்ட ஆளு இல்லை. அவன்பாட்டுக்கு வேலைக்கு போயி பொழச்சுகிட்டு இருக்கான். அபாண்டமா, அவனை கொலைகாரன்னு சொல்லலாமா. இந்த பொய்ப்புகார எதுத்து நிப்போம். ஆனாலும்  இப்படி அபாண்டமா பழி போடறாங்களேனு பதட்டமா இருக்கு. நெல்லை மாவட்ட எஸ்.பி.கிட்ட, அந்த தமிழச்சி மேல புகார் கொடுக்க போறேன். அது பத்தித்தான் வழக்கறிஞரோட பேசிக்கிட்டிருக்கேன்” அப்படினு படபடன்னு பேசினாரு.
இந்த மணி பத்தி, தமிழச்சி போட்ட பதிவுல, “பின் குறிப்பு: அந்த கிராமத்துல மணி அப்படிங்கிற ஆளே  இல்லேனு சொல்லுவாங்க” அப்படினு போட்டிருந்தாரு. ஆனா இசக்கி மகன் மணி, அதே கிராமத்தில இருக்காரு.
சுவாதி – ராம்குமார் மரண வழக்குகள்ள போலீஸ் சொல்ற பல விசயங்கள் மர்மமாத்தான் இருக்கு. அந்த மர்மத்த உடைக்கிறேன் பேர்வழினு கிளம்பியிருக்கிற பேஸ்புக் தமிழச்சியோட பதிவகளும் மர்மமாவே இருக்கு!
ஒன்னுமே புரியல உலகத்துல!