டெல்லி: 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் கருத்து தெரிவித்து உள்ளார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 3க்கு 2 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கியது. இதில் 10சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவிந்திர பட் 50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும்என தெரிவித்து உள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.ரவீந்திர பட், பீலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகளில், தினேஷ் மகேஸ்வரி, பெலா எம்.திரிவேதி, ஜேபி. பர்டிவாலா ஆகிய மூன்று பேரும்
பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி எஸ்.ரவீந்திர பட் கருத்தை தானும் ஆமோதிப்பதாக தலைமை நீதிபதியுயு லலித் தெரிவித்து உள்ளார்.
நீதிபதி எஸ்.ரவீந்திரபட் தனது தீர்ப்பில், உயர்வகுப்பினருக்கான 10சதவிகித இடஒதுக்கீடு சட்ட விரோதம் என்றும், இரட்டை சலுகை வழங்கும், இந்த சட்ட திருத்தம் செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் உள்ள ஏழைகளில், பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர்,. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏழைகளை சேர்க்காதது பாரபட்சமான அணுகுமுறை என்றும்,
50% இடஒதுக்கீட்டை மீறுவது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மண்டல் கமிஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 50% உச்சவரம்பை மீறும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்துள்ளதாக பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். பொருளாதார ரீதியில், முதல் முறையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் சாசன அமர்பில் இடம்பெற்ற நீதிபதி ரவிந்திர பட், சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி, 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என தெரிவித்துள்ளார்.
யாரையும் தவிர்க்க, நம் அரசியலமைப்பு அனுமதிப்பதில்லை. சமூக நீதி கட்டமைப்பையும் அரசியலமைப்பின் அடிப்படையையும், இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் பலவீனமாக்குகிறது. சமூக மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பலன்களைப் பெறுபவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்று நம்பும்படி இந்தத் சட்ட திருத்தம் நம்மை ஏமாற்றுகிறது. அரசியலமைப்பு சட்ட பிரிவு 16(1) மற்றும் (4) ஆகியவை ஒரே சமத்துவக் கொள்கையின் அம்சங்கள் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது.
சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினரில் உள்ள ஏழை மக்களை தவிர்க்கும் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டின் தன்மை சரியானது அல்ல. பலன்கள் என்று விவரிக்கப்படுவதை இலவசம் என்று புரிந்து கொள்ள முடியாது. பொதுவாக, இட ஒதுக்கீடு என்பது ஈடுசெய்யும் ஒரு இழப்பீட்டு வழிமுறையாகும். பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழை மக்களை, 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைப்பதன் மூலம் அரசியலமைப்பால் தடை விகிக்கப்பட்ட பாகுபாட்டை கடைபிடிக்கப்படுகிறது. சமத்துவக் குறியீட்டின் இதயத்தில் இந்த புறக்கணிப்பு, தாக்குதலை தொடுக்கிறது.
ஏழைகளில் பெரும்பாலோர், 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள SC/ST/OBC பிரிவினரை சார்ந்தவர்களே. தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது விதிமீறல் இல்லை. இந்த நிறுவனங்கள் சமூகத்தின் பொருள் வளங்களை உருவாக்குகின்றன. அதில் மாநிலத்தின் முக்கிய அக்கறை உள்ளது.
எனவே, திருத்தம் செல்லுபடியாகும் என்று நான் நம்புகிறேன். ஆனால், மூன்றாவது கேள்வியின் அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கிறேன்.
நான் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இட ஒதுக்கீட்டில் 50 சதவிகித வரம்பு மீறப்பட்டிருப்பது என்பது 10 சதவகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அடிப்படை தாக்குதல். அந்த வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் சட்டத்திருத்தம் விதிமீறல் எனக் கருதப்பட்டது. இந்த தீர்ப்பு அந்த வழக்கில் எழுப்பப்படும் கேள்விகளை யோசிக்க வைக்கிறது.
இரண்டு சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 1893இல், சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் சகோதரத்துவம் பற்றி ஆற்றிய உரையை மேற்கொள்காட்டுகிறேன். தன்னுடைய மதம் மட்டும் பிழைக்க வேண்டும் என்றும் மற்றவர்களின் மதம் அழிய வேண்டும் என கனவு காண்பவர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.