சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. மகாஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து சிவசேனா, அதை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைத்து ஆட்சி செய்த நிலையில், பாஜகவினரின் தூண்டுதலின்பேரில் சிவசேனா கட்சியின் பெரும்பாலோர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால், உத்தவ்தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தியாளர் ஏக்னாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த அவரது மகன் ஆதித்ய தாக்கரே இன்று சென்னை வந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, ஆதித்யதாக்கரேவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அனில் தேசாய், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவனும் இருந்தனர். உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.