ரூர்

முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் எம் ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்து துறை அமைச்சராக பணி புரிந்து வந்தார்.  இவர் மீது லஞ்ச புகார் அளிக்கபப்ட்டுள்ளது.  இதையொட்டி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி கரூரிலுள்ள அவரது இல்லம்,  அவர் பெயரில் உள்ள சாயப்பட்டறை உள்ளிட்ட 20க்கும் அதிகமான இடங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவலதுறையினர் சோதனை இட்டு வருகின்றனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சென்னை இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது.