யூரோ கோப்பை கால்பந்து சாம்பயின்ஷிப் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரான்ஸ். அல்பேனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அடுத்த சுற்றை உறுதி செய்தது.
மற்றொரு குரூப் எ ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணி 1-1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவுடன் டிரா செய்தது.
FotorCreated
இங்கிலாந்து வெற்றி
பிரான்ஸின் லென்ஸ் ஆக்லோ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற குரூப் பி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆடின. 42-ஆவது நிமிடத்தில் வேல்ஸ் அணிக்கு ப்ரீ கிக் கிடைத்தது. 25 மீ. தூரத்தில் இருந்து ப்ரீ கிக்கை எடுத்த வேல்ஸ் வீரர் கேரத் பேல் அற்புதமான கோல் அடித்தார். இதனால் கோல் மூலம் பின்னடைவிலிருந்து இங்கிலாந்து. 56-ஆவது நிமிடத்தில் வார்டி கோலடிக்க, ஸ்கோர் சமன் செய்தது இங்கிலாந்து. இதன்பிறகு ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தின் ஸ்டரிட்ஜ் கோலடிக்க, 2-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
FotorCreated2121
மற்றொரு குரூப் பி ஆட்டத்தில் ஸ்லோவாகியா ரஷ்யா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த தோல்வி ரஷ்யா அணி அடுத்து சூற்றுக்கு செல்ல பின்னடைவு ஏற்படுத்தியது.
48749f0b88d46b3c96c23ac4fa36667d_crop_northகுரூப் சி போட்டில் ஜெர்மனி – போலாந்து அணி போட்டிகள் எந்த அணியும் கோல் எதுவும் அடிக்காமல் இறுதிவரை 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி முடிந்தது.
மற்றொரு குரூப் சி ஆட்டத்தில் வட அயர்லாந்து உக்ரைன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.