டில்லி:
ன்னை சாய்வாலா (டீ விற்றவர்) என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியிடம் இருந்து டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும்  என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான  திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
“நான் ஒரு காலத்தில் டீ விற்ற சாய்வாலா” என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நேரங்களில் பேசி வந்தார். “ஒரு டீக்கடைக்காரர் பிரதமர் ஆகியுள்ளாரே” என்று பலரும் வியந்தனர்.

திக் விஜய் சிங் - மோடி
திக் விஜய் சிங் – மோடி

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் இது குறிதது பேசினார்.
அவர், “பள்ளிப் படிப்பு வரை தான் படித்தேன் என்று முன்பு கூறி வந்த மோடி தற்போது கல்லூரியில் படித்ததாக தெரிவித்துள்ளார்” என்றார்.
மேலும் அவர், “மோடியிடம் இருந்து நான் டீ வாங்கிக் குடித்தேன் என யாராவது கூறினாலோ, அல்லது அவருடன் சேர்ந்து கல்லூரியில் படித்ததாக தெரிவித்தாலோ அவருக்கு நான் 2 லட்ச ரூபாய் பரிசு அளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.