டிஸ் அபாபா

ப்ரிக்க நாடான எத்தியோப்பியா பிரிக்ஸ் அமைப்பில் சேர கோரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா என 5 நாடுகளை உள்ளடக்கிய ஒரு அமைப்பு பிரிக்ஸ் அமைப்பு ஆகும்,  இந்த அமைப்பில் உள்ளவை வளர்ந்து வரும் அல்லது புதிதாக தொழில் மயமாகி வரும் நாடுகள் ஆகும். தென் ஆப்பிரிக்கா இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை வகித்து வருகிறது.

ஆப்பிரிக்க நாடான எதியோப்ப்பிய இந்த பிரிக்ஸ் அமைப்பில் சேருவதற்காகக் கோரிக்கை விடுத்துள்ளது.  ஏற்கனவே எத்தியோப்பியா ஆப்பிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அணிசேரா இயக்கம் போன்ற பல பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.

ஆயினும் மாறி வரும் சர்வதேச சூழ்நிலை மற்றும் சர்வதேச படைகளின் மாற்றத்தைக் கணக்கில் கொண்டு தேசிய நலனைப் பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு எடுத்துள்ளது என அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மெல்ஸ் அலெம் கூறினார்.