லண்டன் மிருகக் காட்சி சாலையில் தனது கூண்டில் இருந்து தப்பித்த கொரில்லா ஒன்று ஆவேசத்துடன் அங்கும் இங்கும் ஓடி கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரம் மிருகக்காட்சி சாலையை பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.

kumpuka

கும்புகா என்ற பெயர் கொண்ட அந்த கொரில்லா ஆவேசமாக தனது கூண்டை விட்டு வெளியேறியதும் மக்கள் பயத்துடன் அலறியடித்து ஓடி அங்கிருக்கும் உணவகத்தில் தஞ்சமடைந்தனர். கும்புகா கொரில்லாவை யாரும் பார்க்க நேர்ந்தால் அதன் கண்களை மட்டும் உற்று நோக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டனர். அப்படி செய்தால் செதய்தவரை கொரில்லா தாக்கத் துவங்கி விடுமாம்.
கிட்டத்தட்ட 90 நிமிட போராட்டத்துக்குப் பிறகு கும்புகா ஊசி போடப்பட்டு பிடிக்கப்பட்டு மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டது. அதற்குப் பிறகே அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இதே போன்று ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹராம்பி என்ற இடத்தில் கூண்டை விட்டு தப்பிய கொரில்லா ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டது. ஒரு சிறுவன் அதனிடம் சென்று மாட்டிக்கொண்டதே அது உடனடியாக சுட்டுக்கொல்லப்பட காரணமாகும்.