ஈரோடு:
ரோடு மாவட்டத்தில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்த மனைவி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன். இவர் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், இவரை வியாழக்கிழமை இரவு கோவை மருத்துவமனையில் இருந்து, அவரது மனைவி ஜோதிமணி, உறவினரான ராஜா ஆகியோர் பெருந்துறைக்கு காரில் அழைத்து வந்துள்ளனர். இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா இருவரும் சேர்ந்து நேற்று இவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் அழைத்து வந்தனர். இவர்கள் பெருமாநல்லூர் அருகே பொரசுபாளையம் பிரிவு பகுதியில் வந்த போது காரில் இருந்து புகை வந்ததாக கூறி இறங்கி உள்ளனர்.

ரங்கராஜனுக்கு காலில் அடிப்பட்டு இருந்தால் அவரை மீட்பதற்குள் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து விட்டதாகவும் இதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக வேறுவேறு மாதிரி பேசியுள்ளனர். மேலும், இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரை உயிருடன் எரித்ததை ஒப்பு கொண்டனர். இதையடுத்து ஜோதிமணி, ராஜா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.