ரோடு

ஞ்சள் விளைச்சலில் முன்னிலையில் உள்ள ஈரோட்டில் தற்போது மஞ்சள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு புகழ் பெற்ற ஈரோட்டில் 4 கொள்முதல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்ளூர் மற்றும் அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, மைசூரு, மாண்டியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கர்நாடக விவசாயிகளும், மஞ்சளை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

இதில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டிருக்கும் மஞ்சளை விட அறுவடை செய்து புதிதாகக் கொண்டுவரப்படும் மஞ்சளுக்கு விலை சற்று அதிகமாக இருக்கும்.  தற்போது புதிதாகச் சந்தைக்குக் கொண்டு செல்லும் மஞ்சளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறும் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பை  sசந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதி விவசாயிகள், ”மஞ்சள் உற்பத்திக்கு தேவையான    இடுபொருட்களின் விலை  கடந்த 15 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது   ஆயினும்  மஞ்சள் விலை மட்டும் உயராதது வருத்தம் அளிக்கிறது” ,என வேதனையுடன்  தெரிவிக்கின்றனர்.