ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்‘ தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என  ஜி.கே. வாசன், குற்றம்சாட்டி உள்ளார். அதுபோல, ஈரோட்டில் பணநாயகம் வெற்றுவிட்டது, தோல்வியை சந்தித்து வரும் அதிமுக வேட்பாளர் தென்னரசு கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட சுமார் 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த,  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவு வரும் வரை பார்த்தால் தான் தெரியும்.

தற்போது திரிபுரா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. கியாஸ் விலை உயர்வு பொருளாதார ரீதியில் மக்களை பாதிக்கும். இதுபோல் தி.மு.க அரசும் தேர்தலில் கியாஸ்க்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்த வேண்டும். கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

அதுபோல செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் எஸ்எஸ் தென்னரசு, பணநாயகம் வென்றுவிட்டது, ஜனநாயகம் தேற்றுவிட்டது.. அவ்வளவுதான்.. என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து கிளம்பினார்.