சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதவராக, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  6நாள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான நேரம் நேற்று (10ந்தேதி) மாலை 3மணி உடன் முடிவடைந்தது. இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த  நிலையில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 77 பேர் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்ட போது முதன் முதலில் ஜெயித்த கட்சி தேமுதிக. அப்போது தேமுதிகவில் இருந்த (இப்போது திமுக) சந்திரக்குமார் வெற்றி பெற்றார். இப்போது ஆனந்தன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

இதையடுத்து தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளத.

இதுதொடர்பாக தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை வீதி, வீதியாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

எழுதாத பேனாவுக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை! பிரேமலதா விஜயகாந்த்…