ஈரோடு: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைவிட தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  தேர்தல் கமிஷன் அறிவிவித்து உள்ளது.   மேலும் கடந்த ஜனவரி மாதம்  ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு 816 பேர்  புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள  ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2லட்சத்து, 26ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில்,  1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள்; 23 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர்எ ன தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை,  145 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆனால், இடைத்தேர்தல் நடப்பதால் அந்தத் தொகுதியில் 7-ந்தேதிவரை (வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) வாக்காளர் பெயர்களை சேர்க்க முடியும் வகையில் தேர்தல் ஆணையத்தின் விதிகள் இருப்பதால், அந்த வகையில், தற்போது, கூடுதலாக 816 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அதன்படி,  375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் தற்போதுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.