சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவதாக என நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
திருமகன் ஈவேரா மறைவையடுத்து, வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ளதால். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக கூட்டணி சார்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கேள்வி எழுந்துள்ளது இந்த நிலையில், பாமக, மநீம போட்டியில்லை என ஒதுங்கிய நிலையில், தேமுதிக, அமமுக வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இதையடுத்து, நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்த நிலையில், வேட்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள சீமான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா போட்டியிடுவார் என அவரை அறிமுகப்படுத்தினார். மேலும், மேனகாக மொழி பற்று, இனப்பற்று கொண்டவர். அதனால் தான் இந்த வாய்ப்பை இவருக்கு வழங்கியுள்ளோம். எங்களுக்கு எங்களுடைய பலம் என்ன என்று தெரியும் அந்த வகையில் இவர் கடுமையான உழைப்பை கொண்டவர் என தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், போட்டியிட்டு, 11,629 வாக்குகளை பெற்றிருந்த நிலையில், மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.