சென்னை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், 65 எம்எல்ஏக்களைக் கொண்ட அதிமுகவில், ஓபிஎஸ் உடன் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே வருகை தந்தனர். மற்ற அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியுடன் வருகை தந்தனர். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் அருகருகே அமர்ந்த சபை நடவடிக்கைளில் பங்கேற்றனர்.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை  10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 9:50 மணிக்கு பேரவை வருகை தந்த ஆளுநருக்கு வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து,  ஆளுநர் ரவியை சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலாளர் வரவேற்று சபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பாநாயகர் இருக்கையில் அமரும் ஆளுநர் தனது உரையை தொடங்கினார். முன்னதாக   தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார்.

அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி. திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. , ‘தமிழ்நாடு எங்கள் நாடு’ என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை முடிந்ததும்,  சபாநாயகர் அப்பாவு தமிழில் ஆளுநர் உரையின் மொழி பெயர்வை வாசிப்பார். பின்னர் சபாநாயகர்  தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தினை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இன்றைய கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். எதிர்க்கட்சி தலைவராக எப்பாடியுடன் பெரும்பாலான எம்எல்ஏக்கள் வருகை தந்த நிலையில், ஒபிஎஸ்-க்கு ஆதரவாக அவருடன் சேர்த்து 4 பேர் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் பேரவையில் எடப்பாடியில் கோரிக்கையை சபாநாகர் ஏற்க மறுத்து வருவதால்,  இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 125 இடங்களும்  கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களும், மற்ற கட்சிகளக்கு 26 இடங்களும் உள்ளன. அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்படி ஓபிஎஸ் என இரு பிரிவாகளாக பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.