ரவுடி பேபி பாடல் மூலம் பிரபலமானவர் பின்னணி பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் மகளான இவர் பாடகர் அறிவுடன் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற சுயாதீன பாடலை பாடியுள்ளார்.

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் தயாரித்திருக்கும் இந்தப் பாடலை அமித் கிருஷ்ணன் படமாக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்தப் பாடலை ரசிகர்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் கொண்டாடி தீர்த்தனர். அதோடு அமுல் நிறுவனம், தீ மற்றும் அறிவு இருவரையும் கார்ட்டூனாக சித்தரித்து சிறப்பித்தது.

இந்நிலையில் எஞ்ஜாயி எஞ்சாமி பாடல் வெளியாகி 3 மாதங்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது யூ-ட்யூபில் 25 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.