பிரணவ் ஜூவல்லர்ஸ் பணமோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து எம்.எல்.எம். மூலம் மக்களிடம் இருந்து திரட்டிய சுமார் 100 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு மாற்றி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக பிரணவ் ஜூவல்லர்ஸ் மீது சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் அந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக செயல்பட்டுவந்த நடிகர் பிரகாஷ் ராஜை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.