கரூர்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர்  செந்தில்பாலாஜி நண்பர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. அவருக்கு சொந்த மான இளந்தளிர் பைனான்ஸ் நிதி நிறுவனம், கிராணைட் கடை உள்பட 4 இடங்களில்  சோதனை நடைபெற்று வருகிறது. இதே வேளையில் கோவையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் ஒருவர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் ஊழல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஏற்கனவே பல முறை அவரது வீடு உள்பட பல இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி னு அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி நள்ளிரவு  அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இதையடுத்து, அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை பெற்றார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது சிறையில் உள்ள செந்தில் பாலாஜி,  இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 11-ந்தேதி 3-வது முறையாக செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து 4வது முறையாக, நேற்று (ஆகஸ்டு 2ந்தேதி) செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சுமார் 18மணி நேரம்  சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, 5-வது முறையாக தற்போது  கரூரில்   செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோவை சாலையில் உள்ள சங்கர் வீடு மற்றும் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மற்றும் தனலட்சுமி உரிமையாளர் வீடு ஆகிய 4 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.  காலை 9 மணி முதல் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர் வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்குந்தபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் கடை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடைபெற்று வருகிறது. செங்குந்தபுரத்தில் உள்ள இளந்தளிர் பைனான்ஸ் நிதி நிறுவனம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.  பாதுகாப்பு பணியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அதுபோல, டாஸ்மாக் சூப்பர் வைசர் முத்துபாலன் வீட்டிற்கு இன்று காலை 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவ ருகின்றனர். கோவையில் டாஸ்மாக் சூப்பர் வைசராக இருப்பவர் முத்துபாலன். இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது. இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு காரில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் நுழைவுவாயிலை பூட்டி விட்டு உள்ளே சென்றனர். மேலும் வீடுகளின் கதவுகளும் அடைக்கப்பட்டது. பின்னர் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று, அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு 10 பேர் அதிவிரைவுபடை போலீசார் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செந்தில்பாலாஜியின் நண்பரான திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்று வந்த  அமலாக்கத்துறை சோதனை நிறைவு