கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பரான திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை நேற்று காலை முதல் நடத்தி வந்த சோதனை, 18மணி நேரத்துக்கு பிறகு முடிவடைந்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதனால் அவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னதாக அவர் வீடு மற்றும் அவரது தம்பி மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் அமலாக்கத்துறை பலமுறை சோதனை நடத்தினர். மேலும் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சோதனைகளும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், நேற்று காலை திடீரென வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்  செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய திமுக நிர்வாகி வீட்டில் சோதனை நடத்தினர்.   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீராசாமிநாதன் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.  செந்தில் பாலாஜிக்கு சாமிநாதன்  நெருக்கமானவர் என்று கூறப்படும் நிலையில் வெளி மாநிலங்களில் பைனான்ஸ் தொழில் , பழனியில் பள்ளி ஒன்றை இவர் நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சாமிநாதனின் தோட்ட பங்களாவிலும்  சோதனை நடத்தினர்.  தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்து  வீட்டிலும் சோதனை நடைபெற்ற

சுமார் 18மணி நேரமாக நடைபெற்று வந்த இந்த சோதனை நள்ளிரவில் முடிவுக்கு வந்துள்ளது.