புஜா

விலைவாசி உயர்வு காரணமாக நைஜீரிய நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் உள்ள நாடான நைஜீரியாவில் விலைவாசி உயர்வு மிகவும் கடுமையாக உள்ளது.  இங்கு வழிப்பறிக் கொள்ளைகள் சகஜமான ஒன்றாக உள்ளது.  ஆள் கடத்தல் துப்பாக்கிச் சூடு ஆகியவையும் அதிகரித்துள்ளன.

இந்நாட்டில் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கொள்ளையர்களால் கடத்தப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.  எனவே நைஜீரிய அரசு பாதுகாப்புப் பணிகளை அதிகரித்துத் தீவிரப்படுத்தி உள்ளது.

தற்போது நைஜீரிய அரசு விலைவாசி உயர்வு காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.  நைஜீரிய அதிபர் அந்நாட்டு மக்களை விலைவாசி உயர்வில் இருந்து காக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.