டெல் அவிவ்
உடல்நலக்குறைவால் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். தற்போது இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. எனவே அவர் டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பெஞ்சமின் நெதன்யாகு உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.