ஓபிஎஸ் தரப்பினர் மீதான தகுதி நீக்க வழக்கு: இன்று மீண்டும் விசாரணை!

Must read

சென்னை,

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உளப்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

திமுக கொறடா தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, எடப்பாடி தலைமையிலான அரசு பதவி ஏற்றதும், அவர் பெரும்பான்மை நிரூபிப்பதற்காக சட்டசபை கூட்டப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை  நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடிக்கு  எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, ஓ.பிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக்கோரி, திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் தனபால் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இதனிடையே, பேரவை உரிமைக்குழு நோட்டீசுக்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விசரணையை நவம்பர் 2 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதேபோன்று, அமைச்சர் பாண்டியராஜன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.

More articles

Latest article