கோவை: மருதமலை அடிவாரத்தில் நகராட்சி கொட்டும் குப்பையால் அந்த பகுதியில் வாழும் யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக  வனஆர்வலர்கள் அதிர்ச்சி  தெரிவித்து உள்ளனர். அதுதொடர்பான  வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

அதில், யானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், முககவசம், பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின்கள் போன்றவற்றையும் உணவோடு உண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருதமலை அடிவாரத்தில் அங்கு அருகில் உள்ள திருவிக நகரில் இரு பள்ளமான ஓடைகள் உள்ளன. மக்களும் நகராட்சியும் அதில் குப்பை கொட்டுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர் அது தான் யானை மலையில் இருந்து இறங்கி ஊர்பக்கம் வந்து இந்த குப்பை மேட்டில், வயிற்றுப்பசிக்காக அங்கு கிடைப்பதை உண்டு வருகின்றன. இதனால் பல யானைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபோயமும் ஏற்பட்டுள்ளது.

வன ஆர்வலர்கள் யானையின் டக் (கழிவு) ஒன்றை ஆய்வு செய்தபோது, அதனுள் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், முக்கவசம், பெண்கள் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறியும் நாப்கின்கள் போன்றவை இருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.