சென்னை:

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழலயைர் பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இந்த மாதம் 31ந்தேதி வரை விடுமுறை விடும்படி உத்தரவிடப் பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட  இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா என 100க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. சீனாவில் மட்டும் 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு  அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து தமிழக அரசும், மாநிலம் முழுவதும் மழலையர் பள்ளி முதல் 5ம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தேவையின்றி வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்.

கூட்டம் நிறைந்த இடங்களுக்கு முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் செல்ல வேண்டாம்.

தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.