சென்னையில் இன்று நள்ளிரவுக்குள் மின் விநியோகம் முழுவதுமாக சீராகும் என மின்சார வாரியம் கூறியிருந்த நிலையில் இன்னும் சில பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலையே உள்ளது. வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளான திருவான்மியூர், கொட்டிவாக்கம் பகுதிகளில் இன்னும் மின்சாரம் இல்லாத நிலையில் இன்றும் மக்கள் இரவை எப்படி கழிப்பது என்ற அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை குழு மாம்பலம், கோடம்பாக்கம், கே கே நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மற்றும் ராயபேட்டை பகுதிகளில் மின்விநியோகம் மறுபடியும் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் மூவாயிரம் நபர்கள் மின் விநியோகம் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவலும் தெரிவித்துள்ளது.மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்னும் ஓரிரெண்டு நாட்களில் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுவிடும் எனவும் அறிவித்துள்ளது.