சென்னை
தமிழக முதல்வர் திரு. பன்னீர்செல்வம் சென்னை மற்றும் வட மாவட்டங்களை பாதித்த வர்தா புயலினை பற்றியும் அதன் மூலம் ஏற்பட்ட சேதங்களை மேற்கோள் காட்டியும் மத்திய அரசுக்கு ஆயிரம் கோடி நிவாரணதொகையை கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் வர்தா புயலினால் பதினாறு பேர் இறந்துள்ளனர் என்றும் பன்னிரெண்டாயிரம் மரங்கள் விழுந்து மிகுந்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார், மேலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மின்கம்பங்களும் எண்ணூறு ட்ரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சேதங்களை நேரில் கண்டு மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழுவை அனுப்ப வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும் மறுசீரமைப்பு வேலைகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை பத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.