சென்னை

சென்னை செண்டிரல் – அரக்கோணம் மார்க்கத்தில் இன்று இரவு முதல் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில்,

”சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு நடைபெற உள்ளது. எனவே இன்று (சனிக்கிழமை) இரவு 9.25, 10.25 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் மின்சார ரயில், இரவு 10 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில், இரவு 10.20, 11.45 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில், இரவு 11.15 மணிக்கு மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயில், இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரயில், இரவு 8.50 மணிக்கு அரக்கோணத்திலிருந்து மூர்மார்க்கெட்டிற்கு வரும் ரயில், இரவு 10.45 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து மூர்மார்க்கெட் வரும் ரயில், இரவு 11.55 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து காலை 3.20, 5.30, 6.35, 7.40, 8.45 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், ஆவடியில் இருந்து காலை 3.50, 4 மணி, 4.25, 6.10, 6.40, 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் புறப்படும் ரயில்கள், ஆவடியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 4.10, 4.35, 6 மணி, 7.05, 7.40, 7.55, 8.45 மணிக்கு புறப்படும் ரெயில்கள், திருவள்ளூரில் இருந்து காலை 3.50, 4.45, 5.55, 6.50, 7.15, 7.40, 8.05, 8.20, 8.30, 9.10, 9.25 மணிக்கு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 3.45, 4.25, 5.25, 6.40, 7.10, 8.15 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரயில்கள், திருத்தணியில் இருந்து காலை 4.30, 5.30, 7 மணிக்கு மூர்மார்க்கெட் வரும் ரயில்கள், அரக்கோணத்தில் இருந்து காலை 6.20, 7.40 மணிக்கு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி இன்று இரவு 10 ரெயில்களும், நாளை 84 ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.