டில்லி

ன்று காலை மரணடந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனருக்கு முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரன்பூர் தொகுதியில் 1998, 2008 மற்றும் 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தல்களில் குர்மீத் சிங் கூனர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டசபை தேர்தலிலும் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் சார்பில் குர்மீத் சிங் கூனர்(75) வேட்பாளர் ஆவார்

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் குர்மீத் சிங் கூனர் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினர் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த ஊரான ஸ்ரீ கங்காநகருக்கு அவரது உடலை எடுத்துச் சென்றதாக அவரது மகன் தெரிவித்தார்.