சென்னை:

சென்னை விமான நிலையம் அருகே உள்ள பரங்கிமலை ரயில் நிலையம், முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. இங்கு, தற்போது இயக்கப்பட்டு வரம் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மற்றும்  மாடி ரயில் போன்றவை இணைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  பரங்கிமலை மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ரூ.6 கோடி செலவில் புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பரங்கிமலை ரயில் நிலையத்தில் தற்போது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அருகில் மெட்ரோ ரயில் நிலையமும் அமைந்துள்ளது. விரைவில் பறக்கும் ரயில் (மாடி ரயில்) சேவையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  ஆலந்தூர் சாலையில் இருந்து மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வசதியாக புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் பயணிகளின் வசதிக்காக படிகளுடன் எஸ்கலேட்டர் வசதியும் அமைக்கப்படுகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 6 மாதங் களில் நிறைவடையும் என  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.