சென்னை:

‘மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்கள்’ உபயோகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை தலைமைச் செயலாகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது தொடங்கி வைத்தார்.

M-Electric Auto என்று அழைக்கப்படும் மின்சாரத்தில் சார்ஜ் செய்யப்படும் இயங்கும் ஆட்டோக்களை  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  கொடியசைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி  வைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காதவகையில்,  எம் ஆட்டோ எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் பெண்கள், மற்றும் திருநங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எம் எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்வதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான், TAB போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை Mauto Pride என்ற மொபைல் ஆப் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.