வரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் – அமைச்சர் துரை முருகன்

Must read

சென்னை: 
ரும் டிசம்பர் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குப் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், நகரத்தில் இருக்கின்ற கட்சியினர் எல்லா கிராமத்திற்கும் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். காரணம், டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சித் தேர்தல் வருகிறது. எனவே கிராமத்து மக்கள் உங்களுக்கு உழைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு அடைந்ததும் வரும் டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article