துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்.  

Must read

துறையூர் பெருமாள் மலை அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில்.
இந்த ஸ்தலம் திருச்சிக்கு வடமேற்கே 47 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ளது. துறையூரிலிருந்து 3 கி.மீ பெரம்பூர் சாலையில் உள்ளது.
மூலவர் திருநாமம் : ஶ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி.
தாயார் திருநாமம்  : ஶ்ரீ அலமேலுமங்கை தாயார்..
தீர்த்தம் : துளசி தீர்த்தம்.
தல விருட்சம் : இலந்தை மரம்.
இக்கோயில் பச்சை மலை மலைத்தொடரில் ஒரு சிறிய மலையின் உச்சியில் உள்ளது. கரிகால் சோழன் திருமலை வெங்கடாசலபதி சுவாமியை தரிசனம் செய்ய விரும்பினார். ஏழுமலைகளைப் பார்வையிட முடியாமல் இறைவன் அவருக்குத் தனது கால் அச்சிட்டுகளை (பெருமாள் பாதம்) தாயார் சன்னதிக்கு அருகில் விட்டு விட்டார். மன்னர் தனதுசெங்கோலை இறைவனுக்கு அளித்துள்ளதை இன்றும் காணலாம்.
இந்த திருக்கோயில் கரிகால் சோழனின் பேரன்களால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. க்ஷேத்திர பாலகருக்கான ஒரு சன்னதியில் கரிகால் சோழன் இருக்கிறார். இங்கே கருப்பண்ணவர் அல்லது வீரஸ்வாமி என அழைக்கப்படுகிறார்.  இங்குப் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது விசேஷம்.  ஶ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஶ்ரீ தேவி ஶ்ரீ பூதேவி சமேதராய் காட்சி அளிக்கிறார்.
மலை உச்சிக்குச் சாலை வழியாகவும் படிகள் வழியாவும் செல்ல முடியும்.  கோயிலின்  தூண்களில் இசை கேட்கும்படி  அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் தசாவதார உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நரசிம்மர் உக்கிரமாகக் காட்சி அளிக்கிறார்.அவரது மடியில்  இரணியகசிபு குடல் கிழிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
மூலவரைத்  தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறவும் கடன் தொல்லையிலிருந்து மீளவும் வேண்டுகிறார்கள்.  அதுவும் புரட்டாசி மாதத்தில் ஒரு நாளிலாவது தரிசனம் கண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். திருமணம் தடைபட்டவர்கள்குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தாயாரை வேண்டி கொண்டால் நிறைவேறுகிறது.
கரிகால் சோழனுக்குக் காட்சி அளித்தபடியால் இத்திருத்தலம் தென் திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது.
தரிசன நேரம்   காலை 9மணி முதல்  மாலை 5   மணி வரை

More articles

Latest article