சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்தாலும், “அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் மட்டுமே பறக்கும் படை சோதனை நடைபெறும் என   தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும் என்றவர்,  அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை நடைபெறும் என்றவர், தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாதுஎன  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு,  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தாலும் எல்லை மாவட்டங்களில் பறக்கும் படை- நிலைக் குழுக்களின் பணி தொடரும்  என்று கூறினார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்டத் தோ்தல் அதிகாரிகளுக்கும்  சாகு  கடிதம் எழுதியுள்ளாா். அதில், தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தோ்தலை எதிா்கொண்டிருக்கும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் பறக்கும் படைகளும் நிலைக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பிறகு, ஒவ்வொரு தொகுதிகளின் முக்கியமான பகுதிகள், எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகள், நிலைக் குழுக்களின் பணிகள் தொடரும். வாக்குப் பதிவு நிறைவடையும் வரையிலும், மறுவாக்குப் பதிவு எங்கேனும் நடைபெற்றால் அது முடிவடையும் வரையும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபடும் என்று தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சென்னை மதுரவாயல் நெற்குன்றம் ஆர்.எம்.பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது வாக்கினை பதிவு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக இருக்கும். சில இடங்களில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது; உடனே அவை சரி செய்யப்பட்டன. மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் சோதனை செய்து வருகின்றனர் என்று கூறினார்.