கட்சி பெயரை பதிவு செய்ய கமலஹாசனுக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கீடு

Must read

சென்னை:

ரும் 21ந்தேதி தனது  அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும், அன்றே புதிய கட்சி  தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் கமலஹாசன், தான் தொடங்க உள்ள அரசியல்  கட்சியின் பெயரை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டிருந்தார்.

அவருக்கு வரும் 15ந்தேதி (வியாழக்கிழமை) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் புதிய அரசியல் கட்சிகள் புற்றீசல் போல தொடங்கப்பட்டு வருகிறது.

நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோர் தனிக்கட்சி தொடங்கி களமிறங்கபோவதாக அறிவித்துள்ளனர். அதுபோல நடிகர் விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்றோரும் அரசியலுக்கு வர இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக தமிழக அரசின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர்கமலஹாசன், வரும்  21-ம் தேதி தனது அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் 15-ம் தேதி பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் நேரம் கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவருக்கு தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அவரது கட்சியின் பெயர் மற்றும் கட்சியின் சின்னம் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

More articles

Latest article